ஆவிகளுக்கு கால் உண்டா என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணுகிறவர்கள் அவை கக்கூஸ் போகுமா, குளிக்குமா என்றெல்லாம் ஆராய்வதில்லை. பேய் என்றாலே அது மாமிசப் பிராணி என்கிற எண்ணம்தாம் நாடு கடந்தும் இருக்கிறது.வெளிநாட்டுப் பேய் சிலுவைக்கு பயப்படும். நம்மூர் பேய் வேப்பிலைக்கு நடுங்கும்.
இப்படியொரு நம்பிக்கை பிறக்கும்போது ஆழ்மனதில் எழுதிவைக்கப்படுகிறது. அதன் பலனாக சினிமாக்காரர்கள் விதம் விதமாக பேய்களுக்கு அரிதாரம் பூசி விடுகிறார்கள். அப்படி ஒரு பயங்கரபடம்தான் ஐல என்கிற ஐஸ்வர்யலட்சுமி.!
உள்ளூர் கோடாங்கி எடுத்தது எல்லாம் சப்பைப் பேயாகி விட்டனவோ என்னவோ…பிரான்ஸ்,சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து தம்பி உன்னி மேனன், கே.ராஜேந்திரன் ஆகிய இருவரும் வந்திருக்கிறார்கள். கதாநாயகி சாந்தினி.
எமன் பட வில்லன் அருள் டி சங்கர் போராளி திலீபன் இருவருக்கும் முக்கிய வேடங்கள். எழுத்து இணை இயக்கம் சந்தோஷ் மேனன். இயக்கம் ஆர்.வி.சுரேஷ். இசை டி.ஆர்.கிருஷ்ண சேத்தன்,ஒளிப்பதிவு ஹேமந்த். ஐ.பி.எஸ்.ராஜேஷ்தாஸ் குத்து விளக்கு ஏற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்திருக்கிறார்.