ஆத்தா கடை பிரியாணி சூப்பராக இருந்தால் அய்யா கடையில் ஆட்டுக்கால் சூப்பு அதைவிட டாப்பாக இருக்கும்ல! அந்த மாதிரி ஆகி விட்டது சினிமாக்களின் நிலைமையும்!
மலையாளத்தில் ‘மோகன்லால்’என்கிற பெயரில் படம் எடுத்திருக்கிறார்கள். மோகன்லாலின் வெறி பிடித்த ரசிகையாக மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார். ரசிகன்தான் ஆவியைக் கொடுப்பானா ,ரசிகை கொடுக்கமாட்டாளா ? கேரளத்தில் பட்டையைக் கிளப்பியது படம்.
பக்கத்து வீட்டின் மீன் குழம்பு வாசம் நம்ம வீட்டு பூஜை அறை வரைக்கும் வரும்போது மோகன்லால் வரமாட்டாரா என்ன, ?பொண்ணு எடுத்த ஊராச்சே சேட்டன்!!
கட்சி ஒரு பக்கம் இருந்தாலும் காசு மேல காரியமாக இருக்கும் ரஜினியின் செல்வாக்கை நமக்கும் பயன்படுத்துவோமே என்று மலையாளப்படத்தை தமிழில் ரீமேக் பண்ணுகிறார்கள்.
படத்துக்குப் பெயர் ‘ரஜினி செல்வி’
மஞ்சு வாரியர் நடித்த கேரக்டருக்கு திருமதி . ஜோதிகா !
சூர்யாவின் துணைவிக்கு செமத்தியான கேரக்டர்.!