அடங்கிப் போற மருமாள் கெடச்சிட்டா வத்திப்போன மாமியார் கூட கூந்தலை சிலுப்பிண்டு சண்டைக்கு கெளம்பிடுவாளாம். ஆத்துல சொல்லுவா! ஆனா பிரகாஷ்ராஜ் அடங்கிப்போற மாட்டுப் பொண்ணு இல்ல!.ஆஞ்சிடுவாளாக்கும்!
கன்னட பிஜேபி ஆட்கள் அவராண்ட அசிங்கமா நடந்திருக்கா. காரை மறிச்சி கலாட்டா பண்ணிருக்கா!
அவர் கூலா ஹாண்டில் பண்ணிருக்கார். எப்பிடின்னு கேக்கிறேளா?
“மோடி பக்தாஸ்! குல்பர்காவில் என்னிடம் ரவுடி மாதிரி நடந்து கொண்டார்கள். ஜோக்கர்ஸ்!
ஹலோ! உங்களுக்கு பேசி புரிய வைக்க முடியாது! என்னை இப்படியெல்லாம் மறித்தால் பயந்து விடுவேன், மிரட்டலாம் என்று நினைக்காதீர்கள்.அது என்னை மேலும் பலவானாக மாற்றும். பிஜேபியின் நாள் எண்ணப்படுகிறது” என்கிறார் பிரகாஷ்ராஜ்.