இதுவரை காவல்துறைப் பக்கம் போகாமல் இருந்த பிரபு தேவா முதன்முறையாக துப்பாக்கி ,லத்தியுடன் அதிரடியாக களத்தில் இறங்கிவிட்டார், நேமிசந்த் ஜபக் தயாரிப்பு. பிரபுதேவாவின் உதவியாளர் முகில் இயக்கம். இவர் போக்கிரி வில்லு ஆகிய படங்களில் தேவாவுக்கு உதவியாக இருந்தவர், நல்ல கதை சொல்லி,
இல்லாவிட்டால் இயக்குநர் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சுரேஷ்மேனன் ஆகியோரை உள்ளே இழுத்திருக்க முடியுமா? நிவேதா பெத்துராஜ் ஹீரோயின் .வளைந்து நெளிந்து ஆடுவதில் நல்ல தேர்ச்சி பெற்றவர், இந்த வருஷ ஸ்பெஷல் இமான் தான்! அஜித் கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்லியதுடன் நில்லாமல் தனது அடுத்த படத்துக்கும் இமான்தான் இசை என்று சொல்லி இருக்கிறாரே!
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஜபக் 12 என்று தற்காலிகமாக வைத்துக் கொள்ளலாம் ,