நடிகர் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போதுடார்ஜிலிங்கில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ரோபோ சங்கர்,முனிஸ்காந்த்ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.இந்தபடத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.ஏற்கனவே இந்த படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரவலாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இது குறித்து கார்த்திக் சுப்புராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தனது படத்தில் கொஞ்சம் கூட அரசியல் இருக்காது என்று தெரிவித்தவர்,அந்த படத்தில் சிம்ரன் நடிக்க உள்ளதாக வந்த தகவலையும் அவர் மறுத்து இருந்தார்.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோயினாக காஜல் அகர்வால் தேர்வாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து இது வரை தயாரிப்பு தரப்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.