‘களவாணி 2’ஃபர்ஸ்ட் லுக்கை, வெளியிட்ட மாதவன் !
சற்குணம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு, சூரி, திருமுருகன் ஆகியோரது நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப்பெற்ற படம் படம் ‘களவாணி’.
இந்நிலையில், கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமல், ஓவியாவே நாயகன் நாயகியாக நடிக்க, இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை, இயக்குனர் சற்குணமே தனது சொந்த படநிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் மாதவன் தன்னுடையடுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.