
ரசிகர்களுக்கு மட்டுமல்ல ,ஒட்டு மொத்த ஊடகங்களுக்கும் சவால் விட்டிருக்கிறார் நடிக ரேணு தேசாய்.
ஆந்திர பவர் ஸ்டார் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி. மறுமணம் செய்யவிருப்பதாக இவர் அறிவித்ததும் பவர் ஸ்டாரின் ரசிகர்கள் மிரட்டினார்கள்.
“கல்யாணமெல்லாம் பண்ணப்படாது”என்று.!
“என்னங்கடா நியாயம்,உங்க பவர் ஸ்டார் மட்டும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்.புள்ள பெத்துக்கலாம்.நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா? செப்டம்பரில் கல்யாணம்” என்பதாக அறிவித்து விட்டார் ரேணு!
சோசியல் மீடியாக்களில் ரேணுவை கிழிகிழி என ரசிகர்கள் கிழித்துத் தொங்கவிட்டனர்.
இதற்கெல்லாம் அஞ்சுகிற கட்டையா அவர்?
தன் வருங்கால கணவருடன் படம் எடுத்து வெளியிட்டார்.அதுவும் எப்படி? தனது முகமும் வருங்கால ‘அவர்’ முதுகு மட்டும் தெரிகிற மாதிரி படம் போட்டார்.
“முடிஞ்சா கண்டு பிடிச்சுக்க”!












