அறிமுக இயக்குநர் வினோத் இயக்கி வரும் புதிய படம்,அதோ அந்த பறவை போல. இந்தப்படத்தில் அமலா பால் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அமலாபாலுக்கு பல சண்டைக்காட்சிகள் உள்ளன. ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போட மாட்டேன் என்று அடம்பிடித்து அவரே நடித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று நடந்த படபிடிப்பில் ,சண்டைக்காட்சியில் நடித்தபோது அமலா பாலுக்கு அவரது வலது கையில் அடிபட்டது. வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தார்.அடிபட்ட பகுதியும் வீங்கத் தொடங்கியது.இதையடுத்து உடனடியாக கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வலது கையின் தசைநாரில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அமலா பாலை நன்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்துஅமலாபால் கூறுகையில்,சண்டைகாட்சிகளில் இதெல்லாம் சகஜமப்பா , நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறேன் என்கிறார்.