சிறகடிக்கத் துடிக்கும் அந்த சின்னஞ்சிறிய பறவையின் அழகினைப் பாருங்கள். ஸ்ரீ தேவியின் சின்ன மகள் குஷிகபூர். மகிழ்ச்சியின் உச்சம் நின்று பெற்ற மகள் அல்லவா ,அதான் அப்படி பெயர் வைத்து இருக்கிறார்கள் போல.!
முதல்மகள் ஜான்வி கபூரின் வெள்ளித்திரைப் பிரவேசம் முடிந்தது.
இனி அடுத்து குஷிகபூர்தான்.!
அவரை எப்படி படம் எடுத்தால் பார்ப்பவர்களின் மனம் பம்பரமாக சுழலுமோ அப்படி படம் எடுத்து விட்டிருக்கிறார்கள்.
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுடன் முதல் படம் இருக்கலாம் என்கிறார்கள் .இருவருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக முன்னரே செய்திகள் வெளியாகி இருக்கின்றன.