இறுக்கமா கட்டிப் பிடிச்சேனா…நடிகையிடம் 5 கோடி கேட்கிறார் அர்ஜுன்!

அர்ஜூன் வழியை பின் பற்றுவார்களேயானால் நாளடைவில் ‘மீ டூ ‘இயக்கம் பலவீனமடையும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. எந்த நடிகையும் தங்களுக்கு இருக்கும் கண்ணியமான தோற்றத்தை இழக்க விரும்பமாட்டார்கள். கிட்டத்தட்ட சின்மயிக்கு எத்தகைய பெயர் இருந்ததோ அதன் தற்போதைய நிலையை பார்க்கிறபோது பரிதாபமாகத் தான் இருக்கிறது.
நடிக்கிற போது காதல் காட்சிகளில் அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டி அணைத்தார்,தனியாக பேச வருமாறு அழைத்தார் என சுருதி ஹரிகரன் குற்றம் சாட்டி இருந்தார். நெருக்கம் என்பது காட்சிகளின் தன்மை வாய்ந்தது. முதலிரவு நெருக்கம் என்றால் ஒரு மாதிரியாக இருக்கும். தனித்த இடங்களில் அணைப்பு என்றால் அதில் ஒரு மாதிரியாக இருக்கும்.
குற்றம் சாட்டிய சுருதி ஹரிகரன் மீது 5 கோடி மானக்கேடு வழக்குப் போட்டிருக்கிறார் அர்ஜூன். இந்த வழக்கை சுருதி எதிர்கொள்வாரா, மன்னிப்பு கேட்பாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.