நடிகை சாந்தினி காதல் திருமணம்!

சித்து +2 படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். தொடர்ந்து,நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர்,டான்ஸ் மாஸ்டர் நந்தாவை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் இன்று காலை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து வரும் 16ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.