கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் , க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் B.தர்மராஜ் தயாரித்து வரும் பெயரிடபடாத புதிய படமொன்றில் ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்கள் . S.S.ராஜ மித்ரன் டைரக்ட் செய்யும் இப்படத்தின் இடைவெளியின் போது படப்பிடிப்பில் இருந்த ஆரியும், ஐஸ்வர்யா தாத்தாவும், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆசிரமக் குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்து பொம்மைகள், சாண்டா கிளாஸ் மாதிரி பரிசு பொருட்கள் மற்றும் மதிய உணவும் கொடுத்து அவர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்.