நடிகர் விஜய் சேதுபதி சென்னை தாம்பரம் அருகே வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்று மாலை 3.30 மணிக்கு வந்தார்.அவரை பூங்கா நிர்வாகிகள் வரவேற்றனர்.அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலி ஒன்றை தத்தெடுத்துள்ளார்.இதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது. ஏற்கனவே கடந்த அக் டோபர் மாதம் நடிகர்சிவகார்த்திகேயன் வண்டலூர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள ’அனு’ என்கிற 10வயது வெள்ளை நிற புலிக்குட்டியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ள நிலையில், தற்போது விஜய்சேதுபதி வெள்ளைநிறப்புலிக்குட்டி யை தத்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.