தயாரிப்பு: பி.பிரதீப்,டாக்டர் ஜி.தனஞ்செயன். கதை : ஹெய்கோ ஹிகாஷினோ ,இயக்கம் :ஆண்ட்ரு லூயிஸ், ஒளிப்பதிவு :முகேஷ், இசை :சைமன் கே.கிங் .
அர்ஜுன், விஜய் ஆண்டனி, ஆஷிமா நார்வால், நாசர், சீதா சம்பத்ராம்.
************************
“மச்சான். அந்தாளு பயங்கரமான குத்தவாளி.!கொலைகாரப்பய.! கிரிமினல்தனமாக யோசிக்கிறவன் .ஆனா அவன் நோக்கத்தில தப்பு இல்லேங்கிறதுக்காக பெரிய போலீஸ் அதிகாரி அர்ஜூன் அவனை தண்டனையில் இருந்து காப்பாத்துறதுக்கு முயற்சி பண்ணலாமா?”
“மாப்ள.! நீ அப்படி பாக்கிற.! குத்தமே செய்யாம எத்தனை பேர் தண்டனை அனுபவிக்கிறாய்ங்கன்னு தெரியுமா? அதிகாரத்தில இருக்குறோம்கிறதுக்காக பொள்ளாச்சில சில காமக் கொடூரங்கள் நடந்ததே…… அவிங்க ….?”
“சரிடா மச்சான்.தப்பினாலும் தப்பிச்சிக்கலாம்.ஆனா நம்ம விஜய் ஆண்டனி மாதிரி போலீஸ் ஆபீசர்ஸ் இருந்தா வக்காலி மாட்டுனான்.மந்திரி தம்பின்னா பெரிய மம்மா கொடுக்கா.?வீடு பூந்து வில்லங்கம் பண்ணுனவன சீதாவும் ஆஷிமாவும் குளோஸ் பண்ற சீன் மாதிரி நம்ம சினிமாவில பார்த்ததில்ல. மிஞ்சிமிஞ்சிப் போனா மண்டைல ஒரு போடு.. அதோடு நிப்பாட்டிடுவாய்ங்க.ஆனா இதில அந்த போராட்டம் நேச்சுரலா இருந்துச்சு.!”
“சீதா பெஸ்ட் செலக்சன்.படத்த பாக்கிறபோது ஏன் சீதாவும் பார்த்திபனும் சேர்ந்து வாழக்கூடாதுன்னு ஒரு நிமிசம் தோனுச்சு.!
“மச்சான் உனக்கு அது தேவை இல்லாத மேட்டரு. இந்தப்படமும் கமல் நடிச்ச பாபநாசம் படமும் ஜப்பான் நாவலின் செல்லபிள்ளங்கதான்.இத டைரக்டரே சொல்லிருக்கார். ஆண்ட்ரு லூயிஸ் இந்த கதையை கொண்டு போயிருக்கிற ஸ்டைல் எனக்கு பிடிச்சிருந்தது.”
“பர்ஸ்ட் ஆப்ல எதிர் வீட்டு ஆஷிமாவை விஜய் ஆண்டனி ஏன் பாஃலோ பண்றாரு, ஆஷிமாவை தேடி வந்த ஆந்திர மந்திரியின் தம்பியை ஏன் அவ்வளவு கோரமா போட்டுத்தள்றார்ங்கிற போர்ஷன்தான் செம வெயிட். ஆனா கத ஸ்பீட் எடுக்கிறது இன்டர்வெல்லுக்கு அப்புறம்தான்.!”
“டைரக்டர் சூப்பரா ஸ்க்ரீன் ப்ளேபண்ணிருக்கான்டா மச்சான்! ஊமைக்குசும்பன்னு சிலபேரு நம்ம ஊர்ல சில பேரு திரிவாய்ங்க. ஒண்ணுமே தெரியாத மாதிரி மொகத்த வச்சிக்கிட்டு வக்காலி படு நாசம் பண்ணிடுவாய்ங்க. அச்சு அசலா விஜய் ஆண்டனிக்கு அந்த கேரக்டர் பொருந்திருக்கு.!”
“ஆனா மாப்ள ..ரொமான்ஸ்ல மட்டும் கரியபவளத்த வாய்ல தடவிக்கிட்ட மாதிரி மொகத்த வச்சிக்கிறார்.டிரெய்னிங் பத்தல. ஆனா அந்த கேரக்டருக்கு வேறு ஆளை நினைக்க முடியல. “
“ஆமா மச்சான். ஆந்திராவ்ல அவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரியா இருந்த ஆண்டனி ஏன் வேலையை ரிசைன் பண்ணிட்டு கட்டிட வேலைக்கு வரணும்?”
“இந்த மாதிரி சின்ன சின்ன மைனஸ்களை பாத்தின்னா ஒரு பயலும் படம் எடுக்க முடியாது.எனக்கு அர்ஜூன் கேரக்டர் ரொம்பவும் பிடிச்சிருந்தது. கொலையாளியை கண்டு பிடிக்க அந்தாளு படுற பாடுதான் நம்மளை நிமிந்தே உக்கார வச்சது ! பிரிலியன்ட் ஃபேஸ். டயலாக் அவருக்கே எழுதுன மாதிரி பவரா இருந்தது.பெரிய ப்ளஸ் அர்ஜூன்தான்டா!”
“ஆசிமாவ குறையே சொல்ல முடியாதுடா மாப்ள. கெடுக்க வந்தவன்கிட்ட இருந்து தப்பிக்க பார்க்கிற சீன்ல அந்த பொண்ணு முகத்த பார்த்தியா இருளடிச்சிப் போயி முகமெல்லாம் பயம். சரி கேமராக்காரனைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே.!”
“படம் பாக்கிறவனை அந்தாளு பதற வச்சிட்டானே மச்சான்! எங்கேயோ பாரீன் போய் எடுத்த மாதிரில்ல இருக்கு. கேமரா ஆளு பேரு என்ன ?”
“முகேஷ்! எனக்கு சாங் அவ்வளவா பிடிக்கல.ஆனா ரீ ரிக்கார்டிங் தீக்கொளுத்திதான்! கிடைச்ச வாய்ப்பில கரெக்டா யூஸ் பண்ணிருக்கார். கொலைகாரனுக்கு கொடுத்த காசு தப்பில்லப்பா.நீட்டா பண்ணிருக்காய்ங்க”