தயாரிப்பு:பி.கே.ராம் மோகன், இயக்குனர் :ராம் பிரகாஷ் ராயப்பா,ஒளிப்பதிவாளர்:சுஜித் சாரங், பின்னணி இசை:ஜேக்ஸ் பிஜாய்.
மிஷ்கின்,சுசீந்திரன்,விக்ராந்த்,அதுல்யாரவி,மகிமா, பேபி மானஸ்வி
***********************************
கோவையில் பதுங்கியிருந்த பயங்கரவாத கும்பலை கூண்டோடு ஒழிக்க காவல்துறை உயர் அதிகாரி மிஸ்கின் போடும் ஒரு பயங்கர நாடகம்தான் கதையின் மையக்கரு. ஆனால் அவ்வளவு பெரிய பாங்க் கொள்ளைக்கு பேபி மானஸ்வியின் ஆபரேசன் செலவை காரணமாக சொல்வதுதான் கிரேட் மைனஸ். மிஸ்கினின் சீக்ரெட் மிஷனின் ஒரு ஆளான கான்ஸ்டபிளுக்கு பயங்கரவாதிகளின் கூடாரம் தெரிஞ்சபிறகு அவர்களை அப்படியே அள்ளுவதற்கு பதிலாக சுசீந்திரன்,விக்ராந்த் ஆபிசர்சை சேஸிங் பண்ணுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
ஆனாலும் அதுதான் கதையை பரபரவென ஓட்டுகிறது. போலீசின் மைனசை எல்லாம் பிளஸ்சாக காட்டியதில் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பாவுக்கு மினிஸ்டர் உள்பட மொத்த டிபார்ட்மெண்டும் நன்றி செலுத்தனும். அத்தனை எந்திரதுப்பாக்கிகள் துப்பிய புல்லட்டுகளால் கிராஸ் ஃ பயரிங்க்கில் யாரும் சாகவில்லை என கள்ளக்கணக்கு காட்டுகிறார் மிஸ்கின்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் தான் சுசீந்திரன் விக்ராந்த் அளவுக்கும் மேலாக பரபரவென பறந்தும் விரைந்தும் கேமிராவுடன் ஓடியிருக்கிறார். படத்துக்கு மிகப்பெரிய பலம்.
மிஸ்கினின் வெயிட்டுக்கு ஏற்ற கனமான வேடம். அவரும் மூச்சு வாங்க ஓடியிருக்கிறார். போலீஸ் அதிகாரி ஒருவர் சீரியஸாக வந்து பயங்கரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக சொல்வதை ஜஸ்ட் லைக் தட் புறம் தள்ளுவது கமிஷனருக்கான மரியாதையை குறைக்கிறது. நடப்பதே அவர்களுக்கான ஆபரேசன் என்பது தெரியக்கூடாதாம். அந்த காட்சியேஅவசியமில்லை.
விக்ராந்த், சுசீந்திரன் நல்ல தேர்வு. பொறம்போக்கு கொள்ளையர்கள்தான் என்பதற்கான தோற்றம் அமைந்திருக்கிறது..குறிப்பாக மிஸ்கின்
இடையில் காமடி என்கிற பெயரில் ஒரு சேனலை சொல்லி அதன் நிருபர்,தலைமை நிருபர்,இவ்விருவருக்கும் உதவுவதாக ஒரு பெண் இவர்களெல்லாம் காமடிக்காகவாம். !எந்த சேனல் மீது காண்டோ தெரியவில்லை.வச்சு பண்ணி இருக்கிறார்கள். பயங்கரவாதிகள் தங்கியிருக்கும் வீட்டில் இருக்கும் கான்ஸ்டபிளை வைத்தும் காமடி பண்ணியிருக்கிறார்கள்.
பாடல் இல்லை.நிம்மதி,!ஆனால் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை கதையோட்டத்துக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
ஜி.ராமராவ் சார்.உங்கள் கத்திரிக்கோலுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்க. சூப்பர் வேலை.!
அடிக்கிற வெயிலில் குழு குழு ஏசிக்காக வருகிறவர்கள் ரசிக்கிறார்களோ இல்லையோ ஊர் நியாயம் ,தண்ணீர் பஞ்சம் பற்றி நிறையப் பேசுகிறார்கள்.
இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா பரபரப்பான கதையை பல குறைகளுடன் சொல்லியிருக்கிறார்.