மேயாத மான் ரத்னகுமார் இயக்கத்தில், அமலா பால் நடிப்பில் உருவான ‘ஆடை’ பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது வெளியாகியுள்ளது.
முதன் முறையாக தமிழ் சினிமாவில் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் நடித்த அமலா பாலின் துணிச்சலை பலரும் பாராட்டிய நிலையில், சிலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்
.இந்நிலையில்,இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை அமலா பாலையும், இயக்குநர் ரத்னகுமாரையும் ஆடை படம் தொடர்பாக, என்னிடம் விவாதம் பண்ணத்தயாரா?என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் அமலாபாலுக்கு டுவிட்டரில் கூறியுள்ளதாவது,
‘ஹாய் டியர், ஆடைபடம் படத்தை பார்த்தேன் வாழ்த்துகள்.
ஒவ்வொரு ஃபிரேமிலும் உங்களின் கடின உழைப்பு தெரிகிறது.நீங்கள் ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? உங்களுக்கும் இயக்குநருக்கும் சில கேள்விகள் உள்ளன’.
திரைப்பட இயக்குநராகவோ அல்லது நடிகராகவோ அல்ல, சாதாரண பார்வையாளராகவும், ஒரு பெண்ணாகவும், பெண் குழந்தைதைகளின் தாயாகவும்தான் கேட்கிறேன் என பதிவிட்டுள்ளார்.