கதை :மகி வி.ராகவ், வசனம்:சுரேந்திரநாத்,ஒளிப்பதிவாளர் :டேனி ரெமென்ட், இசை :ஜிப்ரான், இயக்கம் : ரோகின் வெங்கடேசன் .
தமன்னா,பிரேம்,கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்,யோகிபாபு,காளிவெங்கட்,முனிஸ் காந்த் ,ஸ்ரீஜா ரவி,மைம்கோபி ,பேய் கிருஷ்ணன் . பேபி மோனிகா
**************
பழைய மாளிகை, ஆள் இல்லாத வீடு, நூலாம்படை படர்ந்த கட்டிடம் இங்கெல்லாம்தான் பேய் ,பிசாசு இருக்கும் என்பது கதாசிரியர்களின் கற்பனை. காலம் காலமாக சினிமாவில் கையாளப்படுகிற உத்தி. இந்த பெட்ரோமாக்ஸ் கதையும் அதே சேம் பிளட்.
கே.எஸ்.வெங்கடேஷ்,தமன்னா பேய் கிருஷ்ணன் ,பேபி மோனிகா ஆகியோரை கே.எஸ்.ஜி. வெங்கடேஷின் மகன் பிரேம் கொடூரமாக கொன்று தீ வைத்து கொளுத்தி விடுகிறார்.( போலீஸ் கேஸ் என்னாச்சு என்றெல்லாம் குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது..இன்னொரு டவுட்டு.!பேய்களுக்கு பசிக்காதா? இத வச்சு ஒரு கதை பண்ணலாமே?) பிரேம் மலேசியாவிலிருந்து திரும்பி தாயகம் வருகிறார்,வீட்டை விற்பதற்காக.!
விற்க முடிந்ததா ,அதற்கு அப்பா வெங்கடேஷ், தமன்னா மற்றும் இரண்டு பேய்கள் ஏன் இடையூறாக இருந்தன என்பதை பக்கா காமடியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரோகின் வெங்கடேஷன்.காமடி என்பதால் காரண காரியம் எல்லாம் கேட்கக்கூடாது. பெட்ரோமாக்ஸ்க்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பது ஏழுமலை.கடல் தாண்டி ஒரு குகைக்குள் அன்டரெண்ட பட்சி வயித்துக்குள் இருக்கிறது.!
சும்மா வந்து போய்க் கொண்டிருந்த வெங்கடேஷ்க்கு இந்த படத்தில் நல்ல கேரக்டர். சிறப்பாகவும் நடித்திருக்கிறார். இயக்குனர் கோபால கிருஷ்ணனின் பிள்ளை என்பதை நிரூபித்திருக்கிறார்.வித்தியாசமான அப்பா வேடங்களுக்கா பஞ்சம் ?வழக்கமான முகங்களைபார்த்த கண்களுக்கு கே.எஸ்.ஜி வி. முகம் ஆறுதலாக இருக்கிறது.
தமன்னாவுக்கு இது மூணாவது பேய்.! வேறென்ன சொல்ல.!
முனிஸ்காந்த் ,யோகிபாபு, காளி வெங்கட்,சத்யன், ஆகியோர்தான் கதையை காமடியுடன் நகர்த்தி செல்கிறார்கள். முற்பாதி சோர்வு பிற்பாதியில் போகிறது கல கல.!
சினிமா முரசத்தின் மார்க். 2 / 5