எழுத்து ,இயக்கம் :எல்.ஜி.ரவிசந்தர்.ஒளிப்பதிவு :ஆர்.எஸ்.செல்வா.,இசை :ஹித்தேஷ் முருகவேல் ,பாடல்கள் : அறிவுமதி,நா.முத்துக்குமார்.ரவீந்தர்,நல் .செ .ஆனந்த்.
சந்தோஷ் பிரதாப், சாந்தினி ,இன்னசன்ட்,ஜி,எம்.குமார்,சுஜாதா,கோவிந்த மூர்த்தி .சாந்தி வில்லியம்ஸ் ,டி .பி.கஜேந்திரன்,
**********************
இயக்குநரின் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த கதை இது என்கிறார்கள். சோகமாகத்தான் இருக்கிறது. வழி சொல்லப்போய் வாழ்க்கையில் ஒரு சுகமான சுமையை சுமக்க வேண்டிய கட்டாயத்தை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரவீந்தர். 1996 ஆம் ஆண்டு நிகழ்ந்த கதை என்பதால் முடிந்தவரை செட் பிராப்பர்ட்டிஸ்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் , நாயகனின் வீட்டில் இயக்குநர் விக்ரமனின் படம் ,அந்தக்கால பொம்மை சினிமா இதழ்களில் வெளியான சிவாஜி கணேசனின் அட்டைப்படம்.இப்படி…சில பல அடையாளங்கள்.
இந்த படத்தில் ஊடுபாவாக உதவி இயக்குநர்களின் பரிதாபநிலை ஆங்காங்கே .
ஆனால் அவை காமடிக்காக பயன்பட்டிருக்கிறது. இவ்வளவு வறுமையிலா வாடுகிறார்கள் உதவி இயக்குநர்கள் என்கிற ஐயம் வெளியுலகத்தினருக்கு வரும்.ஆனால் அதுதான் உண்மை.
நாயகன் சந்தோஷ் பிரதாப் தன்னுடைய கைக்குழந்தைக்கு ஒரு வேளை பால் வாங்க படுகிற அவஸ்தை மனதை பிசைகிறது. அந்த குழந்தையின் பசி தீர்த்த கதை கண்ணீரை வரவழைக்கும். நாயகி சாந்தினி கலங்கிய மனதுடன் “வெந்நீரில் சீனியை கலந்து கொடுத்துட்டேங்க.தூங்கிட்டான்.”என்பது உதவி இயக்குநர்களின் வாழ்க்கையில் ஒரு அத்தியாயம்.
1996 -இல் நடந்த கதை என்பதால் சில காட்சிகள் பழமையாக இருக்கிறது. அந்த காலத்து கதை என்பதால் காட்சி படுத்தலும் பழைய ஸ்டைல்.! உள்ளே முதலிரவு. வெளியில் கஜுராஹோ காமத்துச் சிலைகளை போல நடன முத்திரைகளுடன் ஒரு மழை டான்ஸ். ப்பா…!
இன்னசன்ட் நடித்திருப்பது பக்கா. ஒரு ப்ளூ பிலிம் புரொட்யூசராக நடித்திருக்கிறார். கேரளத்தின் பெரிய ஆள். அரசியல்வாதி. இம்மாதிரியான கேரக்டரில் இந்த காலத்து தமிழ் நடிகர்களை நடிக்க வைப்பது கஷ்டம். எவர்கிரீன் ஆர்ட்டிஸ்ட் நாகேஷ் மாமா கேரக்டரில் அந்த காலத்தில் நடித்ததில்லையா? “கொஞ்சம் மார்பு தெரிய டவலை எறக்கினால் நல்லாருக்கும் என்கிற அர்த்தத்தில் டைரக்டரிடம் இன்னசன்ட் சொன்னதும் “இது போதுமா சார் “என்று கேட்டு மொத்த டவலையும் அவிழ்த்துப் போடுகிற சீன் செம.! பக்காவா அப்படி காட்டவில்லை என்றாலும் அந்த உணர்வு பார்க்கிறவர்களுக்கு ஏற்படுகிறது. இப்படி சில இடங்களில் இயக்குநர் ரவிசந்திரன் உழைப்பு இருக்கிறது.
கேமராமேன் ஆர்.எஸ்.செல்வா .ஆர்ட் டைரக்டர் ஜெய்காந்த் இருவரும் கூடியவரை அந்த காலத்து சூழலை காட்டியிருக்கிறார்கள். இசை அமைப்பாளர் ஹித்தேஷ் முருகவேல் .வஞ்சகம் இல்லாமல் போட்ட மெட்டு வரிகளை மழுங்கடிக்கவில்லை என்பது ஆறுதல்.
அந்த காலத்துக் காதலை இந்த காலத்தில் நடப்பது போல சில மாற்றங்களுடன் புதிய காதலாகவே எடுத்திருக்கலாம்.பட்ஜெட் படம் .ஆதரிக்க வேண்டியது ரசிகர்களின் கடமை. தியேட்டர் அதிபர்களின் கருணை மிகவும் தேவைப்படுகிற படம் .மாலை நேரக்காட்சிக்குத் தகுதியான படம்தான்.!
சினிமா முரசத்தின் மார்க்: 2 / 5