என்ன தான் நமது வீட்டில் புளியோதரை செஞ்சு சாப்பிட்டாலும் , பெருமாள் கோவிலில் நாம் பிரசாதமாக சாப்பிடும் புளியோதரைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. சுவை அப்படியே ஆளையே தூக்கி விடும். சாப்பிட, சாப்பிட ருசி கூடுமே தவிர குறையாது. பொதுவாக நம்ம அய்யங்கார் ஆத்துகளில் இந்த வகை புளியோதரை மிகவும் பிரசித்தம் . அவா மட்டும் தான் இந்த மாதிரி புளியோதரை செய்வாளா ? இல்ல , நீங்களும் செஞ்சு சாப்பிடலாம் வாங்க அந்த ருசியான புளியோதரையை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
பெருமாள் கோவில் புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்: –
புளி – சிறிய உருண்டை மல்லி – 1 ஸ்பூன் கடலை பருப்பு – 1 ஸ்பூன் எள்ளு – 1 ஸ்பூன் வெந்தயம் – 1/2 ஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 எண்ணெய் -சிறிதளவு கடுகு – சிறிதளவு உளுந்து 1/2 ஸ்பூன் கருவேப்பிலை -சிறிதளவு மணிலா – சிறிதளவு மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – சிறிதளவு.
செய்முறை: முதலில் ஒரு உருண்டை புளியை எடுத்து அதனை ஊறவைக்கவும் . பிறகு ஒரு கடாயில் கடலை பருப்பு, மல்லி, எள்ளு, வெந்தயம், மிளகு மற்றும் காய்ந்தமிளகாய் போட்டு வறுத்து எடுத்து அதனை மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும் .
பிறகு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடு , கடைப்பருப்பு, மற்றும் உளுந்து போட்டு வறுத்த மணிலாவை அதில் சேர்க்கவும். பிறகு, கூடவே அதனுடன் கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு, அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியை பாதி கடாயில் போட்டு வதக்கவும். பிறகு நாம் ஏற்கனவே ஊறவைத்த புளிக்கரைசலை இதனுடன் சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்கும் போது அதில் ஆறவைத்த சாதத்தினை சேர்த்து கிளற வேண்டும்.கிளறிய பிறகு அரைத்து வைத்துள்ள மீதி பொடியை தூவி மீண்டும் நன்றாக கிளறி எடுத்தால் சுவையான அய்யங்கார் ஆத்து புளியோதரை தயார்.