கல்யாணத்துக்குப் பிறகு கோவில் குளம் என்று சுற்றி வந்து இளமையை வீணாக்காமல் தாலி கட்டுவதற்கு முன்னரே ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கிளம்பி விட்டார்களோ என்னவோ என்று சொல்லவும் முடியாது.
ஹனிமூன் தம்பதிகளை விட வாழ்க்கையின் சுகத்தை அனுபவித்திருப்பவர்கள்தான் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடியினர். . சலித்துப் போகிற அளவுக்கு வெளிநாடுகள் பழகி விட்டன என்று சொல்லலாம். விடுமுறை நாட்களை இவர்கள் அளவுக்கு எந்த சினிமா நடிக -நடிகையராவது கொண்டாடி இருப்பார்களா என்பது தெரியாது.
கடந்த ஆண்டு முடிகிற தருவாயில் இருவரும் தெய்வ தரிசனம் என கிளம்பி விட்டார்கள். திருப்பதி, திருச்செந்தூர் ,உள்ளிட்ட முக்கிய திருத்தலங்களுக்கு ஜோடியாக சென்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். சபரிமலை ஐய்யப்பனையும் விட வில்லை.
கும்பகோணத்தில் மாலை போட்டுக் கொண்டு சபரிமலை மகரஜோதி தரிசனம் செய்து விட்டு திரும்பி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
ஆலய தரிசனங்களுக்கு முக்கிய காரணம் தங்களின் குடும்பவாழ்க்கை குறையின்றி அமைய வேண்டும் என்பதுதான் என்கிறார்கள் விக்கியின் தரப்பினர். அநேகமாக இந்த ஆண்டுக்குள் திருமணம் முடிந்து விடும் என்பது எதிர்பார்ப்பு.
வாழ்க நலமுடன்.!
சாமியே……ய் ,சரணம் ஐயப்பா!