2014 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில், வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா ,ஆகியோரது நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற படம், அரண்மனை. ஹாரர் நகைச்சுவை படமான இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து,2016 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார் சுந்தர்.சி, இதில், த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி ஆகியோர் நடித்திருந்த இந்த படமும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது..இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகத்தை சுந்தர். சி இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக நடிக்க ஆர்யாவும்,ஹீரோயினாக, ராஷி கண்ணாவும் நடிக்கலாம் என்கிறார்கள். இவர்களுடன்,விவேக், யோகிபாபு உட்பட பலர் நடிக்க உள்ளனர்.மேலும் இரண்டு கதாநாயகிகளும் ஒரு முன்னணி கதாநாயகன் ஒருவரும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இது முழுக்க முழுக்க நகைச்சுவை பேய் படமாக உருவாகிறது.