தமிழ்த் திரையுலகின் காமெடி நடிகரான யோகிபாபு ஒருசில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் யோகிபாபுவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து வீட்டினர் அவருக்கு பெண் பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் திடீரென பார்கவி என்ற பெண்ணை யோகிபாபு அடுத்த வாரம் திருமணம் செய்யவுள்ளதாகவும்,பிறகு பார்கவி என்ற பெண்ணை அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும் ஒரு சில ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.இது குறித்து தனுஷின் ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்புக்காக திருநெல்வேலியில் இருக்கும் யோகி பாபு, தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது, ’எனது திருமணம் பற்றி வந்த தகவல் அனைத்தும் தவறானவை என்றும் என் திருமண தகவலை வெகு விரைவில் நானே அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.