எழுத்து இயக்கம் :கீரா ,ஒளிப்பதிவு :சிபின் சிவன் ,இசை :எம்.எஸ்.ஸ்ரீகாந்த் ,
சமுத்திரக்கனி ,நித்திஷ் வீரா ,சாஜுமோன் ,சாந்தினி ,ஷவுந்திகா ,ஷமீக்ஷா ,முத்துராமன்
*************
சாதிய வன்மங்களை சொல்கிற கதைகள் அதிக அளவில் திரைப்படங்களாக வந்து விட்டன .இனியும் வரலாம் என்கிற பயம்இருக்கிறது.அந்த அளவுக்கு அரசியல் இயக்கங்கள் ஊடுருவி இருக்கின்றன.
கன்னிமாடம் ஒரு வகையான சாதிய படம் என்றால் திரவுபதி இன்னொரு வகையான சாதிய படம். “பற “என சொல்லப்பட்ட படம் ‘எட்டுத்திக்கும் பற ‘என்பதாக பெயர் மாறி வந்திருக்கிறது. இயக்குநர் கீரா .
இந்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சாதிய வன்மத்துக்கு உரம் போட்டு இருக்கின்றன.
எத்தகைய தீயவைகளையும் அறம் என்கிற பெயரில் சொல்லிவிட்டால் எதிர்ப்பு இருக்காது என்கிற எண்ணம் படைப்பாளிகளுக்கு வந்திருக்கிறது.
சாதிய படங்களை தலைவர்கள் பார்ப்பது அதற்கு வாழ்த்துகள் பாடுவது ஒரு வகையில் வன்மங்களை தூண்டுவது போலத்தான்.!இது தவிர்க்கப்பட வேண்டும்.
தருமபுரி இளவரசன் -திவ்யா ஆணவப்படுகொலையை மையமாக வைத்துக்கொண்டு கூடுதலாக இரண்டு இணைக்கதைகளை ‘எட்டுத்திக்கும் பற ‘வில் சேர்த்துக்கொண்டு கதை பயணிக்கிறது.
வசதியான குடும்பத்துப்பெண் சாந்தினி , பிளாட்பாரவாசி நிதிஷ் வீராவை விரும்பி கல்யாணம் செய்து கொள்ள அவருடன் சென்னைக்கு ஓடிப்போகிறார். மருத்துவ மனையில் இருக்கும் மகனை காப்பாற்றுவதற்காக முனீஸ்காந்த் 20 ஆயிரம் ரூபாய் தேடி அந்த இரவில்அலைகிறார் .வழிப்பறி திருட்டாக கிடைக்கிறது நிதிஷ் வீராவின் பணம். போலீஸ் என்கவுண்டரில் இருந்து தனது தோழர்களை காப்பாற்றுவதற்காக அலைகிறார் வழக்குரைஞர் சமுத்திரக்கனி .
இந்து மூன்று அணியினரின் பயணம்தான் மொத்தக்கதையும்.! ஏதோ ஒரு புள்ளியில் மூன்று கதையையும் இணைத்து உச்சக்காட்சியை அமைக்க இயக்குநர் கீரா முடிவு செய்து இருக்கிறார்.
ஆனால் அது நிறைவைத் தரவில்லை.
‘கூலிங் கிளாஸ் ,ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டால் பெண்கள் மயங்கிவிடுவார்கள் “என்கிற வசனம் பெண்ணினத்தை கொச்சைப் படுத்துவதாகும்.அதற்கு சாதிச் சாயம் பூசியிருப்பது வன்மம். வாய்ப்புகள் கிடைக்கிறபோதெல்லாம் குறிப்பிட்ட சாதியை வசவுகள் வழியாக அரிப்பைத் தீர்த்துக்கொள்வது இந்த படத்தில் மட்டுமல்ல முன்னாடி வந்திருந்த எத்தனையோ படங்களில் எல்லாத் தரப்பினருமே கையாண்டிருக்கிறார்கள்.முன்னணி நடிகர்கள் அத்தகைய படங்களில் நடித்திருந்தது வசதியாக இருந்து விட்டது.
எட்டுத்திக்கும் பற என்பது குறைந்த பட்ஜெட் படம் .
அவ்வளவே.!