நடிகை கீர்த்தி சுரேஷை ரொம்ப நாளா பார்க்க முடியலையா ,அதான் கல்யாண சேதி ஒரு ரவுண்டு போயிட்டு வந்திருக்கு.!
கீர்த்தியின் அப்பா பாஜக அனுதாபி என்பதால் மிகப்பெரிய பிஜேபி பிசினஸ் மேனின் மகனுக்கு மகளை கல்யாணம் பண்ணி வைக்கப்போகிறார் என்பதாக ரவுண்டு காட்டியது அந்த சேதி .!
உடனடியாக மறுப்பு எதுவும் வரல. காண்டாக்ட் பண்ணவும் முடியல.
நாலு நாள் கழிச்சு கீர்த்தி சுரேஷ் நாளிதழ் ஒன்றில் மறுப்பு சொல்லியிருக்கிறார் .
“அதாகப்பட்டது மக்களே.! அந்த கல்யாண செய்தியை பார்த்த எனக்கு ரொம்பவும் ஆச்சரியமா இருந்தது. இந்த மாதிரியான தவறான செய்தி எப்படி பரவுச்சு என்பதும் தெரியல. எனக்கு அப்படியெல்லாம் உடனடியாக கல்யாணம் பண்ணிக்கணும்கிற ஆசையெல்லாம் இல்ல.
நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு.கொரானா நோயை எதிர்த்து அரசாங்கமும் மக்களும் போராடிக்கொண்டு இருக்காங்க.அதில் கவனம் செலுத்தாமல் ஒருவரின் பெர்சனல் வாழ்க்கையில் கவனம் செலுத்தலாமா?அடிப்படை இல்லாத அந்த கல்யாண சேதியை நம்பவேணாம்.
கொரானாவை எதிர்த்து போராடுங்கள்.அரசுக்கு ஆதரவாக இருங்கள்” இப்படியாக கீர்த்தியின் மறுப்பு செய்தி இருக்கிறது.