வான் வழிப்பயணத்தில் தனது உயிரையே பலி கொடுத்தவர் நடிகை சவுந்தர்யா.
இவரை தவறாக பயன்படுத்த நினைத்த திரை உலக புள்ளிகளுக்கு இவர் ஓர் அபாயச்சங்காக இருந்தார்.
சேத்துமடையில் நடந்த ஒரு படப்பிடிப்புக்கு சென்றிருந்தபோது தனது மன ஆழத்தில் கிடந்த குமுறலை கொட்டி அழுதார்.
அதற்கு பிறகு அவரை விபத்து பலி கொண்டு விட்டது.
எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் “தனக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாக “கூறி இருக்கிறார் ஜெகபதி பாபு. ஆந்திராவின் பிரபல நடிகர்களில் ஒருவர்.
சவுந்தர்யாவுடன் இணைந்து நடித்திருந்த பல படங்கள் சிறந்த வெற்றியை கொடுத்தன. ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடி பேசப்பட்டது.
அதனால்தானோ என்னவோ ஜெகபதிபாபுவை அப்படி சொல்ல வைத்து விட்டது.
ஆனால் அவர் சொன்ன “அ ஃ பெய்ர் ‘ என்கிற சொல்லுக்கு அவர் சொன்ன விளக்கம்தான் “ஆகா ‘போடவைக்கிறது.
“சவுந்தர்யாவுடன் நல்ல நட்புடன் இருந்தவன் என்பதற்காக அப்படி சொன்னேன் “என்கிறார்.
திறமையான நடிகர். செத்துப்போன நடிகையின் புதைகுழியை தோண்டலாமா?