கோ ஸ்லோவா ,கோசுலோவா ? இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என்பதை கேட்டு போட்டி நடத்துகிறார்களாம். வித்தியாசமான போட்டியாக இருக்கிறது.!
படத்தை சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ளார். பி.ஆர்.ராஜசேகர் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதி தயாரித்து இருக்கிறார். “தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் தயாராகியுள்ள இப் படத்தில் நடிகை லட்சுமி, சுதாராணி, சாது கோகிலா, அச்சுதா குமார் கன்னட படத் தயாரிப்பாளர், இயக்குனர்,நடிகர் சுரேஷ் ஹெப்லிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை தமிழில் வெளியிடும் *ஆக்ஷன் ரியாக்ஷன்* நிறுவனத்தை சேர்ந்த ஜெனீஷ் கூறியதாவது,”
இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு புதிய முயற்சியாக சைகாலஜிகல் த்ரில்லராக மூன்று மொழிகளுக்கும் ஒப்பனிங், க்ளைமாக்ஸ் ஆகியவை மட்டும் ஒரே மாதிரியாகவும் உள்ளே நடக்கும் கதை வேறு மாதிரியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்தப்படத்தின் ஹைலைட்டான அம்சம்.
ஒரு மலை பிரதேசத்திற்கு ஒரு வயதான தம்பதி, ஒரு நடுத்தர வயது ஜோடி மற்றும் ஒரு இளைஞன் ஆகியோர் வருகின்றனர்.. அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, அதை அவர்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பது தான் படத்தின் கதை.படத்தை பார்க்கும்போது எதற்காக *கோசுலோ* என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்..
அதற்கு முன்னதாக இந்தப்படத்திற்கு *கோசுலோ* என ஏன் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை யூகித்து அதற்கான சரியான காரணத்தை எங்களுக்கு எழுதி அனுப்பும் 25 நபர்களுக்கு அவர்களுடையே வீடு தேடி பரிசுவரும் புதிய போட்டி ஒன்றையும் நடத்த உள்ளோம்” என்கிறார்
.இப்படத்துக்கு கோபால் இசையமைக்க, ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்