தமிழில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளவர் மலையாள இளம் நடிகர்ஃபஹத் ஃபாசில். மலையாளத்திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவர் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரி விசயத்துக்கு வருவோம்,பொதுவா நடிகர், நடிகைகளுக்கு நடித்து, பணம் புகழ் சேர்ந்தவுடன் தங்களது அந்தஸ்தை காட்டிக்கொள்ள விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்குவது வழக்கம். அதற்கு பகத் பாசிலும் விதி விலக்கல்ல அவர் மிகவும் விலையுயர்ந்த (ரூ.2கோடியே 65 லட்சம் என்கிறார்கள்) போர்ஷ் எனும் காரை அவர் வாங்கியுள்ளார்.
பச்சை நிறத்தில் இருக்கும் இந்த காருடன், ஃபஹத் மற்றும் நஸ்ரியா ஜோடியாக சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.நம்மூர் நடிகர்கள் சிலர் கோடிகளை கொட்டி ஆசை ஆசையாய் வாங்கிய சொகுசு கார்களை வீட்டுக்குள்ளேயே நிறுத்தி வைத்து துடைத்து துடைத்து வைத்து அழகு பார்ப்பதோடு சரி என்கிற ரகசியம் அவருக்கு எங்கே தெரிய போகிறது?
சமீபத்தில் ஒரு இளம் நடிகர் தனது சிறு வயது கனவை நிறைவேற்ற விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கினார். இவரது காரை பார்த்து பல நடிகர்கள் பெரு மூச்சு விட்டனர்.நடிகரும் தன் ‘கெத்’தை காட்ட அவ்வப்போது, சொகுசு காரில் வலம் வந்தார். கார் வாங்கி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், எங்கிருந்தோ வந்த ஒரு டூ வீலர் இளவட்டம் அவரது சொகுசு காரை உரசி விட்டு மின்னலென மறைந்தான்.அவ்வளவு தான் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. டூ வீலர்காரன் போட்ட கோட்டை சரி செய்ய நடிகருக்கு செலவு ரூ 5 லட்சம் .அன்றிலிருந்து இன்று வரை அந்த நடிகர் காரை வீட்டை விட்டு வெளியே எடுப்பதில்லை துடைத்து வைப்பதோடு சரி. என்றாவது ஒரு நாள் இரவில் மட்டும் ஒரு ரவுண்டு.அதுவும் அந்த தெருக்குள்ளேயே……