பாவாடை தாவணியில் ராஷ்மிகா மந்தனா!
ரெமோ படத்தைத் தொடர்ந்து,பாக்யராஜ் கண்னன்,நடிகர் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தை இயக்கியுள்ளார். இப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.இந்நிலையில் சுல்தான் படக்குழுவினர் தற்போது ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.அதில், பாவாடை தாவணிஅணிந்த நிலையில் ராஷ்மிகவுடன், கார்த்தி அமர்ந்துள்ள ரொமான்டிக் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.