ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டியில், “ரஜினி சிறந்த நடிகர். அவர் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன். அரசியலில் எதுவும் நடக்கலாம். வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.