ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.
பிக் பிலிம் இன்டர்நேஷனல் படநிறுவனம் சார்பில்,கோவை ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “![Adhava - Avanthika (28)]()

Related Posts
இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார் .இவருக்கு ஜோடியாக மலையாள படவுலக நாயகி அவந்திகா தமிழில் கதாநாயகியாக அடியெடுத்து வைக்கிறார்.
இவர்களுடன், மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வரும் அறிமுக இயக்குனர் அழகுராஜ் கூறியதாவது, காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு கமர்ஷியல் படம் இது.
சின்னத் திரை நிகழ்ச்சியில் நாளைய இயக்குனர்நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான நிறைய இயக்குனர்கள் படம் இயக்கி வெற்றி பெற்றுள்ளனர். அந்த வரிசையில் நானும் இயக்குனராகும் வாய்ப்பு பெற்று இயக்கும் முதல் படம் தான் இந்த “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “ முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக உள்ளது. படப்பிடிப்பு விரைவில் துவங்கி சென்னை, கோவை மற்றும் கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. படத்தின் நாயகன் ஆதவா, 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடிக்க உள்ளார் இக்காட்சி தமிழ் சினிமாவில புதிய வரலாறு படிக்கும் அளவில் நவீன தொழில் நுட்பயுக்திகள் கையாளப்பட்டு மிக வித்தியாசமாக படமாக்கப்படும் என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை சந்தான கிருஷ்ணன் கவனிக்க, லியாண்டர் லீ இசையமைக்கிறார்.