நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து அதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில்,ஐதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பின் போது திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
முழு ஒய்யவு எடுக்க வேண்டும் என்ற மருத்துவர்களின் கண்டிப்பான அறிவுறுத்தலின் படி தனது அரசியல் அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிக்கை வெளியிட்டார். இதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் சிலர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர் இதற்கு பதிலடியாக ரஜினியும், என்னை நோகடிக்காதீங்க என உருக்கமான அறியும் வெளியிட்டார். இந்நிலையில், ரஜினிகாந்த் விரைவில் சிகிச்சைக்காக வெளிநாடு ( சிங்கப்பூர் அல்லது அமெரிக்கா) செல்ல உள்ளதாக அவருக்கு மிகவும் நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
இதன் காரணமாக சட்டசபை தெறலுக்கு இந்தியாவில் அவர் இருக்க மாட்டார் எனவும் சிகிச்சை முடிந்து அவர் திரும்பும் தமிழக சட்டசபை தேர்தலும் முடிந்து புதிய ஆட்சியம் அமைந்திருக்கும் என்கிறார்கள் மேலும் இப்போதைக்கு அண்ணாத்த படப்பிடிப்பு இருக்காது என்றும் ,தேர்தலுக்கு பின்பே அதாவது,ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்கிறார்கள். மேலும் அண்ணாத்த படத்துடன் ரஜினிகாந்த் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டாலும் ஆச்சரியமில்லை . அது ரஜினிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் அறிவுரையை பொறுத்தே அமையும் என்றும் கூறுகிறார்கள்.