லாக்டவுன் காலத்தில் தனது சமையல் ‘யூ’ ட்யூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா. திருமணத்தின் போது தனது மகள்களின் கண் எதிரே ‘ லிப்லாக்’ விஷயமெல்லாம் நடந்தது வேற விஷயம். சர்ச்சையை ஏற்படுத்திய இவர்களது திருமணம் போலீஸ், நீதிமன்றம் வரையிலும் சென்றது.
இந்நிலையில் இருவரும் கோவாவுக்கு ஜாலி ட்ரிப் சென்றனர். ஆனால், திரும்பும் போதே இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதாகவும் இணையதளங்களில் தகவல்கள் வெளியானது. ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையான பீட்டர் பாலை தனது வீட்டை விட்டே வெளியேற்றியதாகவும் ஊடகங்களில் செய்தி பரவ, தானும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டதாக கூறி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார் வனிதா.
இதையடுத்து, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்த வனிதா சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். மாலத்தீவில் இருந்தப்படியே கையில் சரக்கு கிளாஸுடன் வனிதா ஒய்யாரமாக படுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும், ‘என்ன மேடம் செம போதையா? ‘ என இஷ்டத்துக்கும் கலாய்த்து வருகின்றனர்.