
தயாரிப்பு : சாய் ஃ பிலிம் ஸ்டுடியோஸ், அ .விசுவநாதன் ,இ .பிரவின் குமார்.
எழுத்து ,இயக்கம்: டென்னிஸ் மஞ்சுநாத் ,ஒளிப்பதிவு ; உதயசங்கர், இசை : சித்து குமார், சண்டை பயிற்சி : டேஞ்சர் மணி. பாடல்கள் : மோகன் ராஜன்,
யோகிபாபு, கருணாகரன்,சுனைனா ,மொட்டை ராஜேந்திரன், பிரவின்குமார் ( அறிமுகம்.) வினோத், விஜே சித்து, லட்சுமி பிரியா,நான்சி ஜெனிபர், இன்னும் பலர்..
**************
இது காமடிப் படமா,அல்லது திகில் படமா?
ரெண்டு மணி நேரமா தேடியதில் அதுல பிப்டி,இதுல பிப்டின்னு ஒரு முடிவுக்கு வரலாம். மனுஷனை மனுசனே தின்கிறான் ,அது திகில்.!
யோகிபாபு,கருணாகரன் ரெண்டு பேரையும் கொலைகாரன்னு கதையில வர்ற எட்டு பேர்ல (ஒருவர் மிஸ்ஸிங். ) ஏழு பேர் நினைச்சு பயப்படுறாங்க ,பாருங்க, அங்கேர்ந்து காமடி டைம் ஸ்டார்ட் ஆகுது. திகில்,காமடி ரெண்டையும் கலந்து நம்மள பார்க்க வைக்கிறதுக்கு டைரக்டர் படுறபாடு இருக்கே …ஆஸம்.!
லொக்கேஷன் சூப்பர்ப். உதய சங்கரின் கேமராவுக்கு சரியான வேலை.!
ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்த தாவரம் மனிதனை கடித்தால் கடி பட்டவன் ரத்த வெறி பிடித்து மனிதனையே கொன்று சாப்பிடுவான் என்பதுதானுங்க கற்பனை ஊற்றுக்கு அடிநாதம்.! இடைவேளைக்குப் பிறகுதான் ஊற்றின் பெருக்கு அதிகம்.
யோகிபாபு,கருணாகரன் இருவரையும் காமடிக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்களும் வாங்கிய சம்பளத்துக்கு வஞ்சகம் செய்யாமல் கடமையை செய்திருக்கிறார்கள். சில இடங்களில் சிரிக்க முடிகிறது.
ஜாலி டிரிப்பாக கொடைக்கானல் வருகிறவர்களில் பிரவீன் குமார், வினோத் ,ஜெனிபர் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.
பிக்கப் ,டிராப் மாதிரி மொட்டை ராஜேந்திரன்.
கதையின் நாயகியாக சுனைனா. சும்மா இருக்கிறார்.வீட்ல இருந்தால் வெட்டியாத்தான் இருக்கவேண்டும். நடிப்பதற்கு வந்து விட்டால் ஒன்றும் செய்யாவிட்டாலும் வசதிகளுடன் சம்பளமும் கிடைக்கிது. ராஜமாதாம்மா நீ!
டிரிப் எப்படி?
முழு நீள காமடியாகவே படத்தை எடுத்திருக்கலாம்.!












