சந்தானம்,அனைகா சோதி ,ஆர்.எஸ்.பாரதி ,மொட்டை ராஜேந்திரன் .மாருதி,
கதை திரைக்கதை ,வசனம் : ஜான்சன் ,இசை :சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு : ஆர்தர் வில்சன்.
******************
‘ஏ .1’ படத்தின் வெற்றிக்கூட்டணியான சந்தானம் ,ஜான்சன் கூட்டணி இணைந்திருக்கிற படம்தான் பாரீஸ் ஜெயராஜ். முந்தைய படத்தில் ஏற்படுத்திய குடும்ப பிரச்னையை இந்த கதையிலும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் .
காதலன் ,காதலி இருவருடைய அப்பாவும் ஒரே ஆள் என்றால் என்ன நடக்கும்?
அதுதான் கதையின் ஒன் லைன். இதை வைத்து பின்னப்பட்ட திரைக்கதையில் முற்பாதி படு சொதப்பல். பிற்பாதி ஓரளவு தேறுகிறது.
கணவன் -மனைவியை பிரிப்பதில் கில்லாடியான வக்கீல் பிரகாஷ் ராஜ். இவருக்கு இரண்டு மனைவி .முதல் மனைவியின் பிள்ளை சந்தானம் . இரண்டாவது மனைவியின் மகள் அனைகா .தங்களுக்கு ஒரே ஆள்தான் அப்பா என்பது தெரியாமல் தீவிரமான காதலில் ஈடுபடும் சந்தானம்-அனைகா ஜோடி கல்யாணம் வரை செல்கிறது.
அது எப்படி உடைபடுகிறது என்பதுதான் கிளைமாக்ஸ். அதுவரை கதையை உருட்டுகிறார்கள். பல இடங்களில் மண்டை உடைகிறது. சில இடங்களில் காமடி தெறிக்கிறது.
கானா பாடகராக சந்தானம். இதனால் அத்தனை பாடலும் கானா டைப்பில் காதுகளை குடைகிறது. பல இடங்களில் சோர்வுடன் தெரிகிறார்.
காதலியாக அனைகா சோதி. எந்த கடையில் நடிப்பு விற்கிறது என தேடி அலைகிற ரகம்.
தொலைக்காட்சி நடிகர்கள் அவர்கள் பாணியில் நிறைவாக இருக்கிறார்கள்.
பிரகாஸ்ராஜாக வருகிற மாருதிதான் கதைக்கு பலம். மிகவும் கடுமையான சப்ஜெக்ட்டை காமெடியாக கொண்டு போனதில் இயக்குநருக்கு வெற்றிதான்.!
ஆனால் படத்தின் வெற்றிக்கு அது உதவுமா?