நடிகர் விஷ்ணு விஷால் – பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா ஆகியோரது திருமணம் ஐதராபாத்தில் இன்று நடந்தது . மணமக்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஷ்ணு விஷால் தன்னுடன் கல்லூரியில் படித்த நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினியை கடந்த 2011 டிசம்பரில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஆர்யன் என்ற ஆண் குழந்தைஉள்ளது. இந் நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.இவர்களின் பிரிவிற்கு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தான் காரணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.இந்நிலையில் நீண்ட நாட்களாக ரகசியமாக காதலித்து வந்த
விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா இருவருமே கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்தனர் . இதையடுத்து வரும் இன்று (ஏப்ரல் 22-ம் தேதி) திருமணம் நடைபெறும் என்றும் கூறினார்கள்.அதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் இன்று விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டா திருமணம் நடந்தது . இவர்களது திருமணபுகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.