இரண்டு பாகங்களாக வெளியாகும் அல்லுஅர்ஜூனின் புஷ்பா !
அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இ ந்தியா படமாக உருவாகி வரும் புஷ்பா படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து) தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர், இப்படம் தற்போது இரண்டு பாகங்களாக புஷ்பா வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்காக முதல் முறையாக அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடந்து வந்த நிலையில், இன்னும் சில காட்சிகளே படமாக்கப்படவேண்டி உள்ளதாம். இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் ரூபாய் 250 கோடி முதல் 270 கோடி வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கு படத்தின் கதையை சொல்ல வேண்டிய தேவை இருப்பதால் இந்த முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர்.இது குறித்து தயாரிப்பு தரப்பு கூறுகையில்,”நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் உயிர் பெற்று, வளர்ந்து நின்றிருப்பதால், படத்தில் இரண்டு பாகங்களாக வெளியிட்டால் தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளோம்.சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடன் இருப்பதால் இந்த கதையின் மூலம் திரையரங்குகளில் மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்,” என்று தெரிவித்தனர்இப்படம், ஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மர திருட்டு குறித்து விவரிக்கிறது. இப் படத்தின் முதல் பாகம் வரும் 2021 ஆகஸ்ட் 13 அன்று வெளியாகிறது. இரண்டாம் பாகம் அடுத்த 2022-ஆம் ஆண்டு வெளியாகும் என்கிறார்கள். .