நடிகைகள் உங்களைக்கண்டாலே ஓடுகிறார்கள்… நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு!

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பி எஸ்பிபி பள்ளி நிர்வாகம் குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில், ” பாதிக்கப்பட்ட மாணவர்களிடமோ, பெற்றோரிடமோ பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த மன்னிப்பும் கேட்கவில்லை. இப்பள்ளி உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும்,சம்பந்தப்பட்ட நபரை தூக்கிலிடவேண்டும் என்றும் கடும் காட்டத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் பாஜகபிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஷால் மீது ‘பகீர்’ குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். “சினிமா துறையை பொறுத்தவரையில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பவர்கள் முதலில் கண்டிக்கப்பட வேண்டியவர்கள், விஷால்,முதலில் சினிமாவில் புதிதாக நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் மூத்த பெண் நடிகைகளைப் பாருங்கள்.நீங்களும் உங்களது நண்பர்களும் அந்த இடத்தில் இருந்து வந்தவர்கள்தான். பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுவீர்கள். உங்களால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சினிமா துறையில் உதவித்தேவைப்படும் பெண்களுக்குத் துணையாக உங்கள் வீரத்தை நீங்கள் காண்பித்து இருக்க வேண்டும்.

ஆனால் நடப்பதோவேறு விதமாக உள்ளது. உங்களது தொடர்ச்சியான அணுகுமுறையின் காரணமாக மூத்த பெண் நடிகைகள் உங்களைக் கண்டாலே ஓடுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.