பொதுவா பொது இடங்களுக்கு வரும் நடிகைகளிடம் ரசிகர்கள் பலரும் ‘செல்பி’க்காக கெஞ்சுவதை பார்த்திருக்கிறோம்.ஆனால் ஒரு நடிகையே செல்பிக்காக ஒருவரிடம் கெஞ்சுவதை பார்த்திருக்கிறோமா.அதையும் தற்போது பார்த்தாச்சு.
ஒரு காலத்தில் குட்டி குஷ்பூ என அழைக்கப்பட்ட நடிகை ஹன்ஷிகா, தற்போது தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில்,தன்னுடைய செல்ல நாய் குட்டியிடம் “டெடி சார்,டெடிசார் ஒரே ஒரு செல்பிசார்” என கொஞ்சி கெஞ்சுகிறார்.
ஆனால் அது முகம் கொடுக்க மறுத்து விடுகிறது ஹன்ஷிகாவும் விடாமல் கெஞ்ச,இறுதியில் போனால் போகிறதென்று அந்த செல்ல நாய்க்குட்டியான ‘டெடி’, ஹன்சிகாவுடன் செல்பி எடுக்க ஒத்துழைத்து விடுகிறது’.இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.