
ஜெயம்ரவி இப்போது பொன்னியின்செல்வன் படத்தில் நடித்து முடித்து விட்டார்.
இதைத் தொடர்ந்து அகமது இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்வெளிநாடு செல்வதில் பலவித சிக்கல்கள் இருப்பதால் அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பூலோகம் பட இயக்குநர் கல்யாண் இயக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்.இப்படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இயக்குநர் கல்யாணின் குருநாதர் எஸ்.பி.ஜனநாதனின் அடியொற்றி பொதுவுடைமைச் சிந்தனை அடிப்படையில் கதை எழுதப்பட்டிருக்கிறதாம்.
கடல் மற்றும் கடல் சார்ந்த வாழ்வை அடிப்படையாகக் கொண்ட கதை என்கிறார்கள்.
குஜராத் ,தூத்துக்குடி ஆகிய கடல் சார்ந்த ஊர்களில் முதல் கட்டப்படிப்பு நடக்கலாம்.அங்கு பனை மரங்கள் அதிகமாக இருப்பதே படப்பிடிப்பு நடப்பதற்கு காரணமாக இருக்கிறது.
பனை மரங்கள் என்கிறபோதே தமிழீழம் சார்ந்துதான் கதை இருக்கும் என்பதாக யூகிக்க முடிகிறது.ஜெயம் ரவி ஈழத்தமிழராக நடிக்கிறார் என்கிறார்கள்.












