நடிகர்கள் : ஹர்பஜன் சிங், அர்ஜுன் , லாஸ்லியா, சதிஷ் , ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார், எம்.எஸ். பாஸ்கர் ,பழ .கருப்பையா ,வெங்கட் சுபா,மைம் கோபி ,வேல்முருகன், வெட்டுக்கிளி பாலா
இயக்கம் – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா , ஒளிப்பதிவு – சாந்த குமார் ,இசை -உதயகுமார்.
கல்லூரி மாணவி அனிதாவின் தற்கொலையை மையமாக வைத்துப் பின்னப்படட கதை.
படத்தின் முற்பகுதி காமா சோமா என்று போகிறது. பிற்பாதியில்தான் திரைப்படம் என்கிற கட்டுக்குள் கதை வருகிறது.
எதிர்பார்ப்பே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தான். பந்து வீசுகிற விளையாட்டுக்காரர் எப்படி திரைக்கு பொருந்துகிறார் என்பதை பார்ப்பதற்கு சிலர் வருவார்கள்.
பொம்மைதான் அவர்.! ஓரளவு பரவாயில்லை ! போதும் சார். இந்த படத்துடன் அவரை விட்டு விடுங்கள்.
பிக்பாஸ் லாஸ்லியாதான் அனிதாவாம். அது பிற்பாதியில்தான் நமக்குத் தெரிகிறது. சிரிக்கத் தெரிந்தவருக்கு நடிக்கத் தெரியாதா என்ன?
தெரியலியே தோழா !
படத்தில் ரசிக்க முடிந்தது நீதி மன்ற காட்சிதான்.!
நீதிபதியாக மக்கள் நீதி மய்ய ஆலோசகர் பழ .கருப்பையா.
அரசுத்தரப்பு வழக்குரைஞராக எம்.எஸ்.பாஸ்கர். எதிர் தரப்பு வழக்குரைஞர் அர்ஜூன் .
வாத பிரதிவாதம் நீதிபதியின் குறுக்கீடு என நீதி மன்ற காட்சி மட்டும் உயிர்ப்புடன் இருந்தது.