
விஜயசேதுபதி ,டாப்ஸி ,ஜெகபதிபாபு ,யோகிபாபு ,ராதிகா சரத்குமார் ,கிஷோர் ,ராஜேந்திர பிரசாத் ,சேத்தன் ,தேவ தர்ஷினி ,சுப்பு பஞ்சு ,சுரேஷ் மேனன் .
எழுத்து ,இயக்கம்; தீபக் சுந்தரராஜன்,ஒளிப்பதிவு:கவுதம் ஜார்ஜ் ,விஎப்எக்ஸ் சுப்பரவைசர் ;ஆர் .மணிகண்டன்.
அறிமுக இயக்குநர் தீபக் சுந்தரராஜன் , பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன்.
ஜெய்ப்பூர் அரண்மனையை வைத்து கதை பண்ணியிருக்கிறார். கட்டிடக் கலையின் பெருமைகளை ,அழகியலை படமாக்க ஆசைப்பட்டு கற்பனையில் பின்னிய கதை ,பேய்க் கதையாகி விட்டது.
இதில் அவர் வெற்றிக்கனியை பறித்திருக்கிறாரா ?
முன்னணி நடிகர் விஜய் சேதுபதி கை கொடுத்திருக்கிறார் ,அதை பற்றிக்கொண்டு எல்லைக்கோட்டை தொட்டு இருக்கிறாரா ?
அம்புலிமாமா தற்போது வரவில்லை. அந்த குறையை போக்குகிறது அனபெல் சேதுபதியின் கதை..
அந்த அழகான மாளிகைக்குள் வருகிறவர்கள் சமைத்து உணவு உட்கொண்டால் மரணம் என்பது நிச்சயம் . அப்படி சாகவில்லை என்றால் அந்த மாளிகைக்குள் இருக்கிற ஆவிகள் அந்த ஆளின் துணையுடன் வெளியேறி சுதந்திரம் பெற்று விடும். இதற்கான ஆளை எதிர்பார்த்து யோகிபாபு உள்ளிட்ட பேய்கள் அல்லது ஆவிகள் காத்திருக்கின்றன.
அப்படியொரு ஆள்தான் டாப்ஸி. சாகாமல் ஆவிகளை பார்த்து அவர்களுடன் பேசுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அவரது துணையுடன் அந்த மாளிகையை விட்டு வெளியேறி விடுபடுவதற்காக காத்திருந்த ஆவிகள் டாப்ஸியை அந்த மாளிகைக்குள்ளேயே இருக்கச்சொல்லி வற்புறுத்துகின்றன.
காரணம், விஜய்சேதுபதியின் காதல் மனைவி அனபெல் என்பது அவைகளுக்கு தெரிந்திருப்பதுதான்.இப்படியாக போகிற கதையில் ஜீவன் இல்லை.
காமெடியை நோக்கமாக வைத்துக்கொண்டு காட்சிகள் நகர்கின்றன.
முற்பாதி பேய்களின் கொட்டம் .பிற்பாதி விஜயசேதுபதி -டாப்ஸி காதல் ஆட்டம். மனம் கவராத காதல் .
பொழுது போவதற்காக வருகிறவர்களை சற்று நேரமாவது சிரிக்க வைத்தால் கோடானு கோடி புண்ணியம்.
ஆனால் நொந்து நூடுல்ஸாக திரும்பினால் ?
யாரை நோவது சுவாமிகளே.!












