
சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் பங்காளியூர். அங்க வாழ்கிற எல்லோருமே பங்காளிகள்தாம். ஆனால் ஒருவருக்கொருவர் பகையாளிகள்.ஆத்திர அவசரத்துக்குக் கை கொடுக்க மாமன் ,மைத்துனன் கிடையாது.
பங்காளி வீடு தீப்பற்றி எரிந்தால் தீயை அணைக்கிற மாதிரி பாவ்லா காட்டிக்குவாங்க .வெறும் வாளியில் ஊத்துற மாதிரி பாவனை.சரியான ஏத்துவாளிப்பயலுக .கோடம்பாக்கத்தில இந்த மாதிரி ஆளுங்களை பார்க்கலாம். லெக் தாதான்னு பேரு !
இன்னொரு ஊரின் வேலையே பில்லிசூனியம் செய்வது, இரவெல்லாம் வேலை செய்துவிட்டு பகல் முழுதும் தூங்கக் கூடிய ஊர். அதன் பெயர் சிங்கப்பூர்.
பங்காளியூரில் பிறந்த ஆளு , சொந்த ஊரைத் திருத்த எடுக்கும் முயற்சிக்காக சிங்கப்பூர் போகிறார். அங்கு அவர் என்ன செய்றார் ,அதனால் என்ன நடக்குதுங்கிறதுதான் கதை.
![]()
நாயகனாக கார்த்திகேயன்வேலுவும் ,நாயகியாக சஞ்சனாபுர்ளியும் நடித்திருக்கிறார்கள். நாயகன் கறுப்பா களையாவும் நாயகி செவப்பா சிறப்பாவும் இருக்கிறார்கள்.
நாயகனின் நண்பராகவும் மனைவியாகவும் நடித்திருக்கும் ஆம்பள கிஷோர் தேவ். சேட்டு வீட்டுப்பையனா ? நல்ல நிறமா இருக்கார். பெண் வேடம் பொருத்தம்.
பங்காளியூரின் பங்காளிகளும் சிங்கப்பூரின் மந்திரவாதிகளும் சிரிக்க வைக்கிறார்கள். ஒவ்வொருவரும் விதவிதமாக இருப்பதே சிரிப்பு. அதிலும் கைகளை சிவதாண்டவம் போல் காட்டும் சூனியக்காரர் சூப்பர்.
நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் உருவாவதும் அதற்கு அருவி குருவி ஆகிய சிறுமிகள் ஒத்தூதுவதும் நன்று.
மொகமத் ஃபர்கானின் ஒளிப்பதிவில் பங்காளியூர் பெரிதா? சிங்கப்பூர் பெரிதா? எனப் பட்டிமன்றமே நடத்தலாம்.
சதிஷ்ரகுநாதனின் இசையில் குகை மா.புகழேந்தி பாடல்கள் எழுதியிருக்கிறார். மாவுக்கேத்த பண்டம் .
பின்னணி இசைக்கு நவிப்முருகன் பெஸ்ட் .
திரைக்கதையில் சில தொய்வுகள், சொதப்பல்கள் இருந்தாலும் எல்லோரும் அனுபவித்த மையக்கருவை எடுத்துக் கொண்டு விளையாடியிருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கொற்றவை.
பொண்ணுக்கு எத்தனை பவுன் போடுவீங்க? என்கிற காட்சி உட்பட பல காட்சிகள் வெடித்துச் சிரிக்க வைக்கின்றன.
இந்த காலத்தில் இப்படியும் ஒரு படம் வருவது ஆச்சரியம்தான் .!பொறாமையும் பொச்சரிப்பும் உள்ள ஊரை மையமாக வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்துக்கு ஆதரவு கிடைக்குமா?












