Saturday, March 7, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home General News

8 மாவட்டங்களில் அதி கனமழை! -வானிலை மையம்.

admin by admin
November 10, 2021
in General News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

You might also like

தொகுதி பங்கீடு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உலகநாயகன்!

கருணாநிதியின் மூத்த மகனும் பிரபல நடிகருமான முக. முத்து காலமானார் !

தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை 11 மணி அளவில் நெருங்கும்.

அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் – புதுச்சேரி கடற்கரையை காரைக்காலுக்கும் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும்.

இதன் காரணமாகவட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும் .10.11.2021:: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும்,

டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர் தர்மபுரி ஈரோடு கிருஷ்ணகிரி நாமக்கல் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .

11.11.2021: திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,

ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு, புதுச்சேரி, கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .

12.11.2021:, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

13.11.2021: நீலகிரி,கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

14.11.2021: நீலகிரி கோயம்புத்தூர் சேலம் திருப்பத்தூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சில பகுதிகளில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
அதி கனமழை 5 இடங்களிலும் மிக கனமழை 21 இடங்களிலும் கனமழை 40 இடங்களிலும் பதிவாகியுள்ளது

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 31, காரைக்கால் (காரைக்கால்) 29, வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 25, தலைஞர் (நாகப்பட்டினம்) 24, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 22, பேராவூரணி (தஞ்சாவூர்) 20, திருவாரூர் (திருவாரூர் ) 19, ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்) 17, தஞ்சாவூர் (தஞ்சாவூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை) தலா 16, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 15 . மன்னார்குடி (திருவாரூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) தலா 14, முத்துப்பேட்டை (திருவாரூர்), நன்னிலம் (திருவாரூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), சீர்காளி (மயிலாடுதுறை), மஞ்சளாறு (தஞ்சாவூர்), சிதம்பரம் அவுஸ் (கடலூர்) தலா 13,

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்

10.11.2021 , 11.11.2021 : தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

 

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் ஆய்வு செய்தேன்.

இருநாட்களுக்கு #RedAlert விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். pic.twitter.com/euJlS3tFy9

— M.K.Stalin (@mkstalin) November 10, 2021

admin

admin

Related Posts

தொகுதி பங்கீடு:  மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!
General News

தொகுதி பங்கீடு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

by admin
March 4, 2026
மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உலகநாயகன்!
General News

மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உலகநாயகன்!

by admin
February 14, 2026
கருணாநிதியின் மூத்த மகனும் பிரபல நடிகருமான முக. முத்து காலமானார் !
General News

கருணாநிதியின் மூத்த மகனும் பிரபல நடிகருமான முக. முத்து காலமானார் !

by admin
July 19, 2025
அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!
General News

அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

by admin
June 12, 2025
தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,பாராட்டிய கமல் ஹாசன்!
General News

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,பாராட்டிய கமல் ஹாசன்!

by admin
April 16, 2025

Recent News

ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!

ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!

March 7, 2026
புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

March 6, 2026
கௌதம் ராம் கார்த்திக்கின்  ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ !

கௌதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ !

March 6, 2026
‘துரந்தர்’  – டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகிறது!

‘துரந்தர்’ – டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகிறது!

March 6, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?