சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.முதல்வர் முக ஸ்டாலின் பல இடங்களுக்குநேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கி விட்டுள்ளார். இந்நிலையில்,மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க சென்னையில் உள்ள எழிலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் முகஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு என்பது குறித்தும் மழை, வெள்ள மீட்பு பணிகள் தொடர்பாகவும் அதிகாரிகளிடம், முதல்வர் முக ஸ் டாலின் கேட்டறிந்தார். அப்போது, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த அமுதா என்பவர் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டார். அந்த அழைப்பை எடுத்து பேசிய முதலமைச்சர், பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என அப்பெண்ணிடம் உறுதி அளித்தார்.