சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த போது, சாலையோர கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார், அப்போது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வுசெய்த முதல்வர் முகஸ்டாலின் கூறுகையில், “தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் மழைக்கால நோய்த்தடுப்புச் சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கிவைத்தேன்.
சென்னை முழுதும் இதேபோல் மேலும் 200 சிறப்பு முகாம்கள் செயல்படும். இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தேன்.
ஆய்வுப்பணிகளுக்கு இடையே, பழங்குடி மக்களுக்குப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்களுடன் உரையாடி அவர்களின் கோரிக்கைகள், குறைகளையும் கேட்டறிந்தேன். என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை நாளை (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.













