‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பர்ஸ்ட்லுக் வெளியானது!

நானும் ரவுடி தான் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் புதிய படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இதில், விஜய் சேதுபதி,நயன்தாரா சமந்தா ஆகியோர்  நடித்துள்ளனர் லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின்  பர்ஸ்ட்  லுக் போஸ்டர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. இதனைத் தொடர்ந்து மதியம் நடிகை சமந்தாவின் தோற்றத்தில் மீண்டும் ஒரு போஸ்டர் வெளியாகியது.

இந்த போஸ்டரில் காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து மீண்டும் நாயகி  நயன்தாராவின் தோற்றத்தில் மற்றொரு  போஸ்டர் வெளியானது.இதில் நயன்தாரா, கண்மனி என்ற  கேரக்டரில்  நடிக்கிறார் இந்த படம் வருகிற டிசம்பரில் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக  உள்ளது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.