. AR Entertainment சார்பில் அக்பர், அஜ்மல் கான் & ரேயா தயாரிப்பில், இயக்குநர் விஷால் வெங்கட் எழுதி இயக்கியுள்ல திரைப்படம் .சில நேரங்களில் சில மனிதர்கள். Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் இப்படத்தை வழங்குகிறார். இதில்,அசோக் செல்வன், அபி ஹாசன், மணிகண்டன், பிரவீன், நடிகை பானுப்பிரியா, ரித்விகா, அஞ்சு குரியன், ஆகியோருடன், நாசர், KS.ரவிக்குமார் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் .நடந்தது.இவ்விழாவில் கலந்து கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் பேசியதாவது,தயாரிப்பாளர் அக்பர் என்று பேசிக்கொண்டார்கள், ஆனால் போஸ்டரில் அவர் பெயர் இல்லை. இங்கு பெயர் போட்டுக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களின் தயாரிப்பாளர் அவர் தான். அவருக்காக இங்கு வந்தவர்களில் ஒருவன் தான் நானும். சினிமா நெருப்பு உங்களுக்குள் பற்றிக்கொண்டால், அது உங்களை அழைத்து வந்து விடும். டீ கடையில் இருந்து இங்கு வர முடியுமென்றால் இதை தாண்டியும் அடுத்த படிக்கும் உங்களால் செல்ல முடியும். உங்கள் ஊக்கமும், ஆர்வமும் தான் உங்களை இங்கு வரவைத்துள்ளது. பாலுமகேந்திரா அறிவுரை சொன்னதாக சிலர் சொன்னார்கள், அவர் இருக்கும்போதே நண்பனாக பழகி, கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
எங்களை பார்த்து வியந்து விடாதீர்கள். நாங்கள் செய்த தவறு உங்களுக்கு தெரிந்தால், அதை செய்யாதீர்கள். இப்படத்தில் சில காட்சிகளை பார்த்தேன் அதில் எதார்த்தம் இருந்தது. எங்களுக்கு கதை சொல்வதில் உள்ள இடைஞ்சலே பாடல்கள் தான் அதை சொன்னால் சிலர் கோபித்து கொள்ளலாம். ஆனால் கதை கெடாமல் படத்தில் பாடல்களை பயன்படுத்த எங்கள் ஆசான்கள் சொல்லி தந்தார்கள். ஆனால் இன்று டெக்னாலஜி வளர்ந்த பிறகும், பாட்டை ஏன் வைத்துகொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. உண்மையை சொன்னால் தமிழில் யாருமே இதுவரைக்கும் ஒரு மியூசிக்கில் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. அது நடைபெற வேண்டும்.
கொரோனா போய்விடும் தான் ஆனால் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். அதற்கு உதாரணமாக நானே இருக்கிறேன். என்னை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் நல்ல திறமைசாலி. இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். உங்களை இசையமைப்பாளராக சொன்ன நண்பர் ஏ ஆர் ரஹ்மானுக்கும் நன்றி. இந்தபடத்தில் உழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.