இயக்குநர் மணிரத்னத்துக்கு பாரத் அஷ்மிதா தேசிய விருது!

ஒவ்வொரு வருடமும், புனேவில் அமைந்துள்ள இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான எம் ஐ டி உலக அமைதி பல்கலைகழகம், இந்தியாவின் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆளுமைகளை தேர்வு செய்து அதில் ஐவருக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 18 வருடங்களாக நடந்து வரும் இந்த விருது விழா சார்பில், இந்த வருடம் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை நிகழ்த்தியதற்காக இயக்குநர் மணிரத்னத்துக்கு விருது வழங்குகிறது.
இந்த ஆண்டு விருது பெற்றவர்களை பாரத் அஸ்மிதா விருதுகள் தேர்வுக் குழுவின் தலைவர் டாக்டர் ரகுநாத் மஷேல்கர் – உலகப் புகழ்பெற்ற மூத்த விஞ்ஞானி, டாக்டர் விஜய் பட்கர் – உலகப் புகழ்பெற்ற கணினி விஞ்ஞானி மற்றும் நாலந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர், டாக்டர் விஸ்வநாத் டி காரட் ,ஹோல்டர் ஆகியோர் தலைமையில் கவுரவிக்கப்படஉள்ளனர்.இந்த விருது விழா பொது ஊரடங்கு காரணமாக, வரும் 2022 பிப்ரவரி 3 ஆம் தேதி இணையம் வழியாக நடத்தப்படவுள்ளது