‘டாக்டர்’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய படம் ‘டான்’. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் .
இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.அனிருத் இப் படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப் படம் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை தற்போது கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.