உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் .
இந்நிலையில்,கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும், தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.